புத்தூர் கலைமதி கிராமத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய முற்பட்டபோது,ஒரு தரப்பு தகனம் செய்ய முயல, மற்றொரு தரப்போ அதனை எதிரான இதனால் அங்கு ஒரு பெரிய கலவரமே நிகழ்ந்தது.
இது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் பரவியதையடுத்து பலரும் இந்த சம்பவத்தை பற்றி தேட ஆரம்பித்தனர். இதனாலே மயான பிரச்னையின் முக்கிய காரணம் என்ன வென்று கசிந்துள்ளது ,அது என்னவெனில்
சிறுபட்டி மேற்கு கிந்துசிட்டி மயானம் 54 பரப்புடையது.200 வருடங்கள் பழமையான மயானம் இது. சிறுபட்டி, கிழக்கு, மேற்கு, வடக்கு, புத்துர் மேற்கு, கிழக்கில் உள்ள ஒரு பகுதினருமாக நான்கு சமூகத்தை சேர்ந்த மூவாயிரம் வரையான குடும்பங்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
எல்லா சமூகத்தினரும் ஒரேய மேடையில் தகனம் செய்யும் செயல் இலங்கையில் நடப்பது அரிதான ஒன்றாகும்.
அந்த மாயனமானது 2015இல் தனக்கு சொந்தமான பெக்கோ இயந்திரத்தின் மூலம் சீர்படுத்தி 50,000 ரூபா பெற்றுக்கொண்டார் செல்வம் என்பவர்.
2016 நொவெம்பரில் 3,30,000 ரூபா பெறுமதியான எரிகொட்டகை மயானத்தில் அமைப்பதற்கான ஒப்பந்த அடிப்படையில் அந்த வேலையை செல்வமே செய்து கொடுத்தார்.
இதுவே நீதிமன்றம் வரை சென்றது இங்கு முரண்பட்டு நின்ற இருதரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களே. தகனப்பிரச்சனையின் அவசரம் கருதி நீதிவான் சம்பவ இடத்திற்கு வந்து, ஒரே சமூக பிரச்சனையென்பதால் வரைவிடக்கூடாதென்பதாலேயே வேறு மயானத்தில் தகனம் செய்யுமாறு கூறியிருந்தார்.
நீதிபதி அந்த இடத்தைவிட்டு சென்றதும், மயான அபிவிருத்தி சபை தலைவரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கடுமையான தாக்குதலையும் செல்வம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், நேற்று உடலை தகனம் செய்ய, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தின் அடிப்படையில், மல்லாகம் நீதிமன்றம் அனுமதியளித்திருத்தது. இதை தொடர்ந்தே களேபரம் உருவானது.