இறைவனிடம் மனதை செலுத்த உதவும் பக்திக்கான பல வழிகளில் இறைவனின் புகழை பாடுவதும், கேட்பதும் முக்கிய வழிகள் என்றே சொல்லலாம்.
இதில் நாம் தெய்வத்தை நோக்கி விரதம் இருக்கும் போது அந்த தெய்வத்திற்குரிய ஆலயத்திலோ அல்லது அந்த தெய்வ சன்னிதி உடைய மற்ற ஆலயத்திலோ நாம் அந்த தெய்வத்திற்கான புராணத்தை பாராயணம், பாடல்களை பாடியயும் வழிபாடு செய்கிறோம்.
ஏழைகளின் தெய்வமாய் எல்லோருக்கும் உடனே அருள் செய்பவன் முருகன். அப்படியாக முருகனுக்கு உகந்த விரதங்கள் பல உண்டு. அதில் மகா கந்த சஷ்டி மிக முக்கியமானது.
இவ்விரதத்தின் போது பலரும் பாலன் தேவராயன் எழுதிய கந்த சஷ்டி பாடலை பாடுவதும், படிப்பதும் வழக்கம்.
எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை சொல்லும் போதோ, பாடலை பாடும் போதோ நாம் சரியான பொருளுணர்ந்து பாட வேண்டும். அப்படி நாம் செய்யும் போதே உருக்கத்துடன் இறைவனிடத்தில் பக்தி செலுத்த முடியும்.
கந்த சஷ்டி கவசத்தில் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டிய வரிகள்….
“எத்தனை குறைகள்
எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன்
எத்தனை செய்யினும்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்”
இந்த வரிகள் வரும் போது நம் மனம் உருக வேண்டும், கண்களில் நீர் பெருவேண்டும். அறிந்தோ அறியாமலோ நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாக பாடல் வரிகள் அமைந்திருக்கும்..
மேலும் பல விடயங்கள் கீழே வீடியோவில்…