கொரோனா வைரஸால் இறக்கும் அபாயம் யாருக்கு அதிகமாக உள்ளது என்பது குறித்து விளக்கம் அளித்த நிபுணர்கள் அது தொடர்பிலான முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதேநேரம் உலக அளவில் ஒட்டுமொத்த இறப்பு விகிதம் குறித்து சரியான தகவல்கள் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகின் 63 நாடுகளுக்கு தற்போது பரவி விட்டது.
கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறியவே அவரை 14 நாட்கள் தனிமையில் வைத்து பரிசோதிக்க வேண்டும்.
அப்போது தான் தெரிய வரும் என்பதால் மிக விரைவாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மூச்சுக்காற்று, அவரின் இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் மற்றவருக்கும் கொரோனா பரவுகிறது. இது பரவாமல் தடுக்க சீனாவில் முகத்தில் முகமூடி அணிந்தபடிதான் மக்கள் பயணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சீனாவில் இருந்து தென்கொரியா, ஜப்பான், வடகொரியா, இத்தாலி, சிங்கப்பூர், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிவேக கொரோனா பரவி வருகிறது. உலகில் 61 நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மேற்கண்ட நாடுகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ்க்கு எதிரான உலகளாவிய இடர் மதிப்பீட்டை வெள்ளிக்கிழமை தனது உயர்மட்ட நிலைக்கு உயர்த்தியது, உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ள கொரோனா ஒரு தொற்றுநோய்க்கு நிகராக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நிபுணர்கள் கொரோனா வைரஸ் யாரை அதிகம் கொல்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதய பாதிப்பு உள்ளவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், சீனாவில் 72,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளிம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி, இதய பாதிப்பு உள்ள வயதானவர்கள் (pre-existing heart condition ) அல்லது உயர் இரத்த அழுத்தம் (hypertension) உள்ள வயதானவர்களை மிக அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். இவர்கள்தான் அதிகம் இறந்துள்ளார்கள்.
60ஐ கடந்தவர்கள் பிப்ரவரி மாத மத்தியில் 44,700 நோய்த்தொற்றாளர்களிடம் இருந்து நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள் மூலம் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
80 சதவீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது 60 வயதுடையவர்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்டவர்கள் என்று ஆய்வு கூறுகிறது, இது அதிகாரப்பூர்வ சீனா சிடிசி வார இதழில் வெளியிடப்பட்டது.
சீனா ஆய்வில் ஆண்கள் பெண்களை விட கிட்டத்தட்ட 3 முதல் 2 என்ற வித்தியாசத்தில் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அது நடத்தை காரணமாக இருந்ததா என்றால் தெரியவில்லை.
சீனாவில் பெரும்பாலான ஆண்கள் புகைபிடிக்கிறார்கள்..சில பெண்களும் செய்கிறார்கள், ஹார்மோன் வேறுபாடுகள் போன்ற உயிரியல் காரணிகள் ஏதும் உள்ளதா என்பது இன்னும் அறியப்படவில்லை.