சிரியா வான்வெளியில் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு சிரியா, இட்லிப் அருகே ஒரு போர் விமானம் தரையில் விழுந்துள்ளது.
விமானம் துருக்கி நாட்டுடையதா? அல்லது சிரியாவுக்கு சொந்தமானதா? என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வந்தன. இந்த ஜெட் சிரிய அரசாங்காத்திற்கு சொந்தமானது என்று துருக்கி செய்தி நிறுவனம் கூறியது.
விமானத்தில் பயணித்தவர்கள் குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, வடமேற்கு சிரியா வான்வெளியில் விமானம் மற்றும் ட்ரோன்கள் பறப்பதற்கு சிரிய இராணுவம் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/I30mki/status/1234052757356568577
சிரிய வான்வெளியில் நுழையும் எந்தவொரு விமானத்தையும் சுட்டு வீழ்த்துவோம் என சிரிய இராணுவம் எச்சரித்துள்ளது.
அதே சமயம் சிரிய மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளதால் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.