நடிகர் அக்ஷய் குமார் பாலிவுட் சினிமாவின் டாப் ஹீரோ. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக 2.0 படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் அவர் நடித்து வரும் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வசூல் செய்து கொண்டிருக்கின்றன. சமூக நலம் சார்ந்த விசயங்களையும் செய்து வருகிறார்.
பலருக்கும் உதவி வரும் அவர் தற்போது ராகவா லாரன்ஸின் காஞ்சனா படத்தின் ரீமேக்கான லட்சுமி பாம் என்ற படத்தில் திருநங்கையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அக்ஷய் குமார் திருநங்கைகளுக்காக வீடு கட்டி கொடுக்கும் திட்டத்திற்காக ரூ 1.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளாராம்.
இதனால் திருநங்கைகள் சமூகத்தினர் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.