ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார துறை அமைச்சகம் குறிப்பிட்ட மாஸ்க்கை மக்கள் அணிய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதில் இருந்து தங்களை காத்து கொள்ள மக்கள் வெவ்வேறு விதமான முகமூடிகளை அணிந்து வருகின்றனர்.
சிலர் தரமில்லாத முகமூடிகளையும் அணிந்து வருகின்றனர், அதில் ஒரு சிலர் முகமூடியின் பயன் என்ன என்று கூட தெரியாமல் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார துறை அமைச்சகம் கடந்த சனிக்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், N-95 முகமூடியை அணிய வேண்டாம் ஏனெனில் இது சுவாச மண்டலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி எதிர்கால சுவாச நோய்களுக்கு வழிவகுக்கும்.
انتشر مؤخراً ارتداء الكمامات الطبية بين أفراد المجتمع، تعرّف أكثر على مدى صحة ذلك
.
.
Currently, medical masks are commonly used in the society. Know more about the facts.#فيروس_كورونا_المستجد #كوفيد19#وزارة_الصحة_ووقاية_المجتمع_الإمارات#coronavirus#covid19#mohap_uae pic.twitter.com/EhvMkGh3ta— وزارة الصحة ووقاية المجتمع الإماراتية – MOHAP UAE (@mohapuae) February 28, 2020
இந்த முகமூடியை குழந்தைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது, N-95 ஒரு மருத்துவ முகமூடி பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படும் இடங்களில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களுக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது என்று அறிவுறுத்தியுள்ளது.