கொரோனாவிற்கு எதிராக சீனா போராடி வரும் நிலையில், இலங்கை பள்ளி மாணவர்கள் சிலர் கடிதம் மற்றும் ஓவியங்களை அனுப்பியதால், அதற்கு சீன அதிபரின் மனைவி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக சீனா கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக சீனாவில் தற்போது வரை 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அதை கட்டுப்படுத்துவதற்கு சீனா போராடி வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருக்கும் Devi Balika Vidyalaya பள்ளி மாணவர்கள், கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் சீனாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக கடிதம் மற்றும் ஓவியங்களை அனுப்பியிருந்தனர்.
இதைக் கண்ட சீனா அதிபரின் மனைவி , சீனா கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் சிறப்பு தருணத்தில் அவர்களின் கடிதமும் ஓவியங்களும் கிடைத்தன.
இந்த ஓவியங்கள் சீன மக்களுடன் இலங்கை மக்களின் நேர்மையான நட்பை நிரூபிக்கும் வகையிலும், அன்பு நிறைந்தவையாகவும் இருந்தது. அதிபர் ஷியும் அவர்களை மிகவும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், இலங்கை பொதுப் பள்ளியில் சுமார் 2,000 மாணவர்களிடமிருந்து 43 மாணவர் பிரதிநிதிகள் கூட்டாக சீன அதிபதியின் மனைவிக்கு கடிதம் எழுதி, அவர்களின் ஓவியங்களை இணைத்து, தொற்றுநோய்க்கு எதிரான சீனாவின் போருக்கு ஆதரவைக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது,