இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவது, உலகம் முழுவதிலும் இருக்கும் இஸ்லாமியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று ஈரான் உச்ச தலைவர் அயோத்துல்லா காமேனாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிஏஏவுக்கு எதிராகவும் மற்றும் ஆதரவாகவும் போராட்டங்கள் நடைபெற்றன. இது திடீரென்று கலவரமாக மாறியதால், அங்கு ஏராளமான இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இதனால் சிலர் உயிரிழந்தனர்.
இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படுவதால், இந்தியா-ஈரான் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது.
இரண்டு நாட்டு உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி கலவரத்தை ஈரான் கடுமையாக கண்டித்து கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், டெல்லி கலவரம் குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது என்று தெரிவித்தார்.
பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும், முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடினார்.
அதுமட்டுமின்றி, இந்திய வெளியுறவுத்துறை சார்பாக இந்தியாவிற்கான ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து தற்போது ஈரான் உச்ச தலைவர் அயோத்துல்லா காமேனாய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் இந்திய இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவது உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
The hearts of Muslims all over the world are grieving over the massacre of Muslims in India. The govt of India should confront extremist Hindus & their parties & stop the massacre of Muslims in order to prevent India’s isolation from the world of Islam.#IndianMuslimslnDanger
— Khamenei.ir (@khamenei_ir) March 5, 2020
இந்திய அரசு, இந்தியாவில் இருக்கும் இந்து தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும். அவர்களின் கட்சிகளை அடக்க வேண்டும்.
இந்திய இஸ்லாமியர்களை கொன்று குவிப்பதை அவர்கள் நிறுத்த வேண்டும். இந்தியா உலக நாடுகளில் இருந்தும், உலக இஸ்லாமியர்களிடம் இருந்தும் தனித்து விடப்படுவதை தவிர்க்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, டெல்லி கலவரத்தில் அப்பாவை இழந்து கண்ணீர்விடும் சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்
இது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.