மேற்கு ஆப்பிரிக்காவின் கினியாவில் கால்பந்தாட்ட வீரர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியதால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கினியாவின் Étoile de Guinée கிளப்பை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் Kankan-ல் நடைபெறவிருந்த காலபந்தாட்ட தொடருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது பேருந்து தலைநகர் Conakry-வில் இருந்து சுமார் 250 கி.மீற்றர் தொலைவில் இருக்கும் Mamou நகரத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்த போது, பேருந்து திடீரென்று பெரும் விபத்தில் சிக்கியது.
இதனால் பேருந்தில் இருந்த சுமார் 8 கால்பந்தாட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 17 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு சிலரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஒரு சில ஆங்கில ஊடகங்கள் 11 பேர் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகததால், உண்மை நிலை என்ன என்பது தெரியவில்லை.
இது போன்ற விபத்து முதல் முறை அல்ல, கினிய கால்பந்து அணி சம்பந்தப்பட்ட இரண்டாவது அபாயகரமான சாலை விபத்து இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாத இறுதியில், உயர்மட்ட பக்க வக்ரியா ஏசியின் குழு பேருந்து விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.
இரவு நேர விபத்தில் தலைநகர் கொனக்ரிக்கு வெளியே ப்ரிகுயாடியில் ஒரு டிரக் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் Sierra Leonean Alfred Kargbo இறந்தார், மிட்பீல்டர் அபூபக்கர் கமாரா மற்றும் பஸ் டிரைவர் என்பா லே ஆகியோர் மறுநாள் மருத்துவமனையில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.