வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருவோர் மூலம் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதாக சீனா பயந்த நிலையில், தற்போது அது நடந்துவிட்டது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் சீனாவில் இருந்து தான் முதன் முதலில் பரவியது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
இருப்பினும் சீனாவில் இந்த நோயின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கிருந்து தான் பரவியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நோயின் தாக்கம் காரணமாக தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்து ஒரு லட்சத்தை நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுதும் சீனாவுக்கு வெளியே கொரோனா தொற்று அபாயம் 17 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலகச் சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.
இதனால் வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு வருவோர் மூலம் கொரோனா தொற்று அபாயம் இருப்பதாக சீனா பயந்து வந்தது. தற்போது சீனா நினைத்தது போன்று நடந்துவிட்டது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் 16 பேர் சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று, வியாழக்கிழமையன்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மூலம் 36 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அந்த நாடு நினைத்தது போன்றே நடந்ததுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளன.
சீனாவில் மட்டும் இந்த கொரோனா வைரஸால் 3042 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,552 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.