அரசு தேசிய பாதுகாப்பிற்க்கு கொடுக்கும் முக்கியத்தை சிறுவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமேதச தலைமையில் உருவாகியுள்ள புதிய கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் இன்று கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசும் அரசாங்கம் நாட்டிலுள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தவறி வருகின்றது. அதற்கு உதாரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் வெளியான சிறுமியொருவர் தொடர்பிலான காணொளியை கூறலாம். எனவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பிற்க்கு காண்பிக்கும் கவனத்தை நாட்டிலுள்ள சிறுவர்கள் மீதும் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி சஜித் பிரேமதாச உருவாக்கியுள்ள இப் புதிய கட்சியின் அலுவலக திறப்பு விழாவில் சஜித்தின் மனைவி ஜலனி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, மனோ கணேசன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர்கள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.