ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள கானா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள போனொ கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கின்டபோ நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து அங்குள்ள டெட்ஸிமென் நகரினை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது.
இந்த பேருந்து கின்டபோ – டமெல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள அமொமா குவன்டா கிராமத்திற்கு அருகே சென்ற சமயத்தில் எதிர்திசையில் பேருந்து வந்து கொண்டு இருந்துள்ளது.
இந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதவே, இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் தீப்பற்றி எறிந்துள்ளது. இதில் சுமார் 35 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். மேலும், 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அலறித்துடித்தனர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.