தமிழரசு கட்சியின் நியமனக் குழு நாளைய தினம் திருகோணமலையில் இரகசிய சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.
தமது கட்சியின் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பில் இந்த சந்திப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
தமிழரசுக் கட்சியின் நியமனக் குழு கூட்டம் கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
இந்த கூட்டத்தின்போது பலத்த எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டதன் காரணமாக எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாம் கூட்டம் நிறைவு பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வேட்பாளர் நியமனம் என்பது தொடர்பில் கடும் குழப்பம் நிலவியதன் காரமணாக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த இரகசிய சந்திப்பை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்போது தமக்கு சார்பான, தமது தரப்பிலுள்ள வேட்பாளர்களின் பெயர்களை அவர்கள் இறுதி செய்யவுள்ளனர்.
தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புத் தராமல் தென்னிலங்கையில் உள்ள சிவில் சிங்கள அமைப்பு ஒன்றின் புது முகங்கள் கொடுக்கின்ற அழுத்தத்தின் ஊடாக பல வேட்பாளர்கள் புது முகங்களாக அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
கட்சிக்காக பாடுபட்ட, உழைத்த இளைஞர் யுவதிகளை தமிழரசுக் கட்சி இதன் மூலம் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியமன குழு, மாவட்டக் கிளையைச் சேர்ந்தவர்கள் நாளைய கூட்டம் தொடர்பில் விழித்தெழ வேண்டும் எனவும் நாளைய கூட்டம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.