இலங்கையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளானதாக இரண்டாவது நபர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
44 வயதுடைய குறித்த நபர் இதற்கு முன்னர் அந்த வைரஸ் தொற்றியதாக உறுதியாகிய நபருடன் தொடர்பில் இருந்தவர் என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் தம்புளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஒன்றாக தங்கியிருந்ததாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாவதாக தொற்றுக்குள்ளான இலங்கையருடன் இந்த நபருக்கு தொற்றியிருக்கலாம் என நம்பபப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபரும் சுற்றுலா வழிக்காட்டி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது வரையில் இரண்டாவது நபர் சென்ற இடங்கள் பழகிய நபர்கள் தொடர்பில் தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை இயக்குனர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் எனவும் தொடர்ந்து சிறந்த சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.