தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
மேலும், தமிழில் இவர் நடித்த திரைப்படங்களில் சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தினால் தனது கவனத்தை தெலுங்கு திரைப்படங்களில் செலுத்தி வருகிறார். மேலும், தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான மஹாநடி திரைப்படம் இவருக்கும் தேசிய விருதை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடித்துள்ள வரலாற்று திரைப்படம் தான் மரைக்காயர். அப்படத்தின் ஒரு காட்சியில் கீர்த்தி மேலாடையில்லாமல் நடித்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமுகவலைத்தளங்களில் பரவி வருகிறது.