கொரோனா வைரஸ் பரவலை எதிர்ப்பதற்கான நடவடிக்கையாக, தனது எல்லைகளை மூடுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
கோவிட் -19 கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக, கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இந்த கட்டுப்பாடுகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். விமானங்களில் இருந்து வரும் மக்கள் அறிகுறிகளை காட்டினால் தடுத்து வைக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நீங்கள் வெளிநாட்டில் இருந்தால், வீட்டிற்கு திரும்ப வேண்டிய நேரம் இது” என தனது இல்லத்தில் இருந்து ட்ரூடோ இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
மேலும் அறிவிப்பு வரும் வரை கனடியர்கள் அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்க வேண்டும் என்றும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.