கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக சுவிஸ் அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸானது உலக நாடுகள் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று சுவிற்சர்லாந்து அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ளது.
ஐரோப்பாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களின் தாயகமான ஜெனீவா நகரம், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு இடத்தில் கூடுவதற்கு தடை விதித்துள்ளது.
சினிமாக்கள், திரையரங்குகள், விளையாட்டு மையங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிலையங்கள் அனைத்தும் மூடப்படும். உணவு சந்தைகளுடன் ஹோட்டல், உணவு கடைகள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் சிறிய கணிப்பொறியகம் (small kiosk) மட்டுமே திறந்திருக்கும்.
அஞ்சல் மற்றும் வங்கி சேவைகள் திறந்த நிலையில் இருக்கக்கூடும். அதே போல் உணவை விநியோகிக்கும் அல்லது எடுத்து செல்லும் விற்பனை நிலையங்களும், சிகையலங்கார கடைகள், முடிதிருத்தும் மற்றும் பாலியல் விடுதிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.
இவை அனைத்தும் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 6.00 மணி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.