21 வயதான ஸ்பானிஷ் கால்பந்து பயிற்சியாள கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மலகாவை தளமாகக் கொண்ட அட்லெடிகோ போர்டடா ஆல்டாவின் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரான்சிஸ்கோ கார்சியா (21) என்பவர் நிர்வகித்து வந்தார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதில் இறுதியாக கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அல்லாமல் அவருக்கு கொடிய இரத்த புற்றுநோயும் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமையியன்று உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இளைய நபர் மற்றும் மலகா பிராந்தியத்தில் இந்த நோயால் இறக்கும் ஐந்தாவது நபர் என்றும் நம்பப்படுகிறது.
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வரை, அவர் தனக்கு புற்றுநோய் இருப்பது பற்றி அறிந்திருக்கவில்லை. முன்பே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கால்பந்து குழு தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பயிற்சியாளருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.