வெளியில் சென்று வீட்டிற்கு வந்த கணவனை உள்ளே வரும் போது கையை கழுவிவிட்டு வரும்படி கூறியதாக மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்றிரவு ஓட்டமாவடி – மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பகுதியில் உள்ள நபரொருவர் வெளியில் சென்று மீண்டும் தன்னுடைய வீட்டுக்குள் வந்தபோது அப்போது அவருடைய மனைவி நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதனால் கைகளை கழுவிவிட்டு உள்ளே வாருங்கள் என கூரியுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த கணவன் மனைவி மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
இதனையடுத்து கணவரின் தாக்குதலில் காயமடைந்த பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில், தாக்குதலை மேற்கொண்ட நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.