பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் முதியவர்களுக்கு சீக்கிய கூட்டமைப்பு இலவச உணவு வழங்கி வருகிறது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 230,542 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 9,390 என அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பானது உலகின் 177 நாடுகளையும் பிராந்தியங்களையும் ஆக்கிரமித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில்,
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் குடிமக்களின் நலன் கருதி சுய தனிமைப்படுத்தலுக்கு ஊக்குவித்து வருகிறது.
பிரித்தானியாவில் சீக்கிய கூட்டமைப்பு ஒன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.
Are you 65+ plus?
In #Coronavirus isolation?
Need support to get food?Sikhs in Slough, UK have come up with Mobile Food Support for the elderly & isolated & are Providing FREE HEALTHY & NUTRITIOUS essentials to help them! Pls share! #COVIDー19mx #CoronavirusOutbreak #Sikh pic.twitter.com/l0kqpATzk9
— Harjinder Singh Kukreja (@SinghLions) March 17, 2020
பெர்க்ஷயரில் உள்ள ஸ்லஃப் பகுதியில் இந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர். சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் முதியவர்களால் போதிய உணவு பண்டங்களை சேமித்து வைக்க முடியாமல் போகலாம் என்ற காரணத்தால்,
தேவை கருதி இந்த கூட்டமைப்பை அணுகும் முதியவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 137 பேர் மரணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 33 பேர் மரணமடைந்துள்ள நிலையில்,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,692 என அதிகரித்துள்ளது. இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், குடியிருப்பில் இருந்தே பணியாற்றவும் பணியாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



















