இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் மக்கள் கடைகளிலும், பெற்றோல் நிலையங்களிலும் நிரம்பி வழிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான புகைபடங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூடுவதனை தவிர்க்க அரசங்கம் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தவுள்ள நிலையில், மக்கள் இவ்வாறு கூடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




















