கொரோனா பரவாமல் இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த கூடிய வகையில், மருத்துவ குணம் நிறைந்த சூப் ஒன்றை தயார் செய்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் சிவா.
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்தவர் சிவா(வயது 28). இவர் நீதிமன்றம் எதிரே ஜூஸ் கடை வைத்துள்ளார்.
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தைகளையும், முதியவர்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும் விரைவாக தாக்கும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக இருக்குமாறும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் விதமாக பாரம்பரிய முறைப்படி, நெல்லிக்காய், கேரட், சின்ன வெங்காயம், கருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, வேப்பிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து, சூப் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார் சிவா.
நம்மை சுற்றியுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடாது என முன்னெச்சரிக்கையாக தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக நெகிழ்கிறார் சிவா.