கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை கனடா நாட்டு பிரதமரின் மனைவி என்று பலரும் ஒரு வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய கனடா பிரதமர், தனது மனைவியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்திருந்தார்.
இதனால், ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது குழந்தைகளும் லண்டனிலிருந்து திரும்பிய பின்னர், மார்ச் 12 அன்று இவர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின் இவரது குழந்தைகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பிலிருந்து வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கனடா பிரதமரின் மனைவியின் வீடியோ பதிவு எனக்கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
அதில், உள்ள அந்தப் பெண் ஐ.சி.யு பிரிவில் படுத்தப்படுகையாக உள்ளார். அவர் தனது மருத்துவ நிலைமையை விவரித்து வீடியோவில் பேசுகிறார். அவர் பேசத் தொடங்கும்போதே கடுமையாக இருமல் செய்கிறார். அவரால் பேசவே முடியவில்லை. ஆகவே அவர் கொரோனா வைரஸ் குறித்து மக்களை எச்சரிக்கிறார்.
மேலும் வீடியோவில் காணப்படும் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தன்னால் சுவாசிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார். இவர் ஒரு கொரோனா வைரஸ் பாதித்த நோயாளி எனத் தெரிகிறது. ஆனால் இவர் கனடா நாட்டு பிரதமரின் மனைவிதானா என்பதில் சந்தேகம் எழுந்தது.
இதனால், இந்தியா டுடே நாளிதழ் இதன் உண்மைத்தன்மை குறித்து சோதனையை மேற்கொண்டது. அதில் வீடியோ பொய்யானது என்று கண்டறியப்பட்டுள்ளது. வீடியோவிலுள்ள பெண் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி அல்ல என்றும் இவர் லண்டனைச் சேர்ந்த ஒரு கொரோனா நோயாளி என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த காணொளியில் இருக்கும் பெண் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 39 வயதான தாரா ஜேன் லாங்ஸ்டன். லண்டனில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் தாரா தனது மொபைலை வைத்து இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அதுதான் தவறான அடையாளத்துடன் இப்போது வைரலாகியுள்ளது.
MISERICÓRDIA!.!.!. E ainda idiotas falando que é apenas uma gripe forte … bando de retardado .!!.!.
Publiée par Luis Gustavo Moretti sur Mercredi 18 mars 2020