நாட்டை அச்சுறுத்தும் கொரோனாவால் களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 கிராம சேவகப் பிரிவுகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேருவளை பொலிஸார், பிரதேச சுகாதார அதிகாரிகள், மாவட்ட செயலகம் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ள்ளது.
இதன்படி சீன கோட்டை வீதி, தர்கா நகர வீதி, நலீம் ஹாஜியார் வீதி,ஜாமீயா ஹலீமியா வீதி மற்றும் புஞானந்த மாவத்தை ஆகிய பகுதிகள் மூடப்படவுள்ளன.
கோவிட்19 வைரஸ் ஏற்பட்ட நபர் அந்த பகுதிகளில் சென்றிருந்ததுடன் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் மக்களுடன் சந்திப்புக்களை நடத்தியிருப்பதகவும் கூறப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.