பிரபல தொகுப்பாளினியுமான ரம்யா வளர்த்து வந்த அவரது நாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியைத் தொடங்கிய ரம்யா, ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
நாடே கொரோனா வைரஸ் அச்சத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடிகை ரம்யா தான் செல்லமாக வளர்த்து வந்த மிலோ என்ற நாய் மரணித்துவிட்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது, நாடே தற்போது கொரோனா என்ற கொடிய வைரஸை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே என்னுடைய மிலோ என்ற நாயும் கடந்த பல வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் போராடியது. அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது.
அவனுக்கு உடல்நிலை சரியில்லாததைப் பார்த்து நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது என்னுடைய ஒரு பகுதியை இழந்ததாக உணர்கிறேன்.
எனக்கு நிபந்தனையில்லாத, அளவில்லாத அன்பைக் கொடுத்த மிலோ தற்போது இல்லை. இந்த இழப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யாரும் கொடுக்கமுடியாத மகிழ்ச்சியை நீ எனக்கு கொடுத்தாய். என்னை பாதுகாத்தாய்.
நான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன். மீண்டும் சந்திப்போம். என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.




















