கொரோனா வைரஸ் காரணமாக வருமானத்தை இழந்திருக்கும் நபர்களுக்கு மாதம் 2000 டொலர் வழங்கப்படும் என்றும், அதற்கான விண்ணப்பம் வரும் 6-ஆம் திகதி துவங்கும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் கனடாவும் உள்ளது. இந்நாட்டில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,489-ஐ தொட்டுள்ளதுடன், 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டின் முக்கிய எல்லைகளை மூடிய கனடா, இந்த நோயின் பரவலை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
If you’ve lost your income because of COVID-19, the Canada Emergency Response Benefit will give you $2,000 a month for up to 4 months. It doesn’t matter whether you worked full time, on contract, or were self-employed – you qualify and can apply starting the week of April 6th.
— Justin Trudeau (@JustinTrudeau) April 1, 2020
இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் காரணமாக உங்கள் வருமானத்தை இழந்திருந்தால், கனடாவின் Emergency Response Benefit உங்களுக்கு 4 மாதங்கள் வரை ஒரு மாதத்திற்கு 2,000 டொலர் வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/JaroGiesbrecht/status/1245415423497007104
மேலும், நீங்கள் முழுநேர வேலை செய்தீர்களா? ஒப்பந்தத்தில் இருந்தீர்களா? அல்லது சுயதொழில் புரிந்தீர்களா? என்பது முக்கியமல்ல நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்கள் என்றால் இந்த வாரத்தின் ஏப்ரல் 6-ஆம் திகதியில் இருந்து நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த Emergency Response Benefit -க்கான தகுதிகள் என்ன? இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தொடர்பான கேள்விகளுக்கு அரசு, https://www.canada.ca/en/services/benefits/ei/cerb-application.html என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
தகுதிகள்
- இது தொழிலாளர்களுக்குக் கிடைக்கும்
- கனடாவில் வசிப்பவர்கள், குறைந்தது 15 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
- கொரோனா காரணமாக வேலை செய்வதை நிறுத்தியவர்கள் அல்லது வேலைவாய்ப்பு காப்பீடு அல்லது நோய் சலுகைகளுக்கு தகுதியானவர்கள்.
- 2019 ஆம் ஆண்டில் அல்லது அவர்கள் விண்ணப்பித்த திகதிக்கு 12 மாதங்களுக்கு முன்னர் குறைந்தது 5,000 டொலர் வருமானம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
- கொரோனா தொடர்பான காரணங்களின் விளைவாக வேலையை நிறுத்திய நபர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.
- நீங்கள் ஒரு வேலையைத் தேடுகிறீர்கள், ஆனால் கொரோனா காரணமாக வேலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், நீங்கள் இதற்கு தகுதியற்றவர் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.