ஜேர்மனியில் ஒரே நாளில் 6000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 140 பேர் உயிரிழந்துள்ளதால், நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ தொட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியும் கொரோனா வைரஸிடம் இருந்து தப்புவதற்கு போராடி வருகிறது.
இந்நிலையில் நேற்று மட்டும் புதிதாக 6,156 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 73,522-ஐ தொட்டுள்ளது.
அதுமட்டுமின்றி நேற்று முன் தினம் கொரோனாவால் ஜேர்மனியில் 149 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று 140 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 872-ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜேர்மனியில் இறப்பு வீதம் 1.2 சதவீதத்தை எட்டியுள்ளது.
இத்தாலிக்கு மிகவும் நெருக்கமாக, ஜேர்மனியில் இருக்கும் தென் மாநிலங்களான Bavaria மற்றும் Baden- கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 872 பேரில் 509- பேர் இப்பகுதியை சேர்ந்தவர்கள் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
ஜேர்மனியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்தாலும், அதில் பலி எண்ணிக்கை அந்தளவிற்கு இல்லை என்றே கூறப்படுகிறது.
ஏனெனில் ஜேர்மனி ஒரு வாரத்திற்கு 500,000 சோதனைகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் இந்த நோய் தொடர்பான ஒவ்வொரு சந்தேகத்தையும் பரிசோதிக்க விரும்புவது குறிப்பிடத்தக்கது.