உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் கொரானா வைரஸ். அச்சுறுத்தலை மட்டும் அல்ல. லட்சக்கணக்கான மனித உயிரையும் பறித்துக் கொண்டு வருகிறது.
கொரானா நுரையீரலைதான் அதிகளவில் பாதிக்கிறது. கொரோனா, நுரையீரலை எவ்வாறு பாதிக்கும். உயிருக்கு எவ்வாறு ஆபத்தை விளைவிக்கும் என்பது பற்றி உலகப் புகழ்பெற்ற சுவாச நோய்களுக்கான மருத்துவர் ஜான் வில்சன் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மற்ற வைரஸ்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் கொரோனா வைரஸ் நுரையீரல் முழுவதையும் பாதித்து உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.
எப்படி நோய் பரவுகிறது, எப்படி மனிதனை தாக்குகிறது என்பதை பற்றி ஆஸ்திரேலியா சுவாச நோய்களுக்கான மருத்துவருமான பேராசிரியர் ஜான்வில் சனின் விளக்கமாக பேட்டி:
கொரோனா ஒரு தொற்றுநோய்
கொரோனாவை ஒரு தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் மிகவும் சாதாரணமாகவே உள்ளதாக சொல்கின்றனர்.
அதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்புக்கு ஆளான 80% மக்கள் எந்தவொரு சிறப்பு சிகிச்சையும் இன்றி குணமடைவதாகவும், ஆறில் ஒரு நபர் மட்டுமே தீவிரமாக நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா நுரையீரலில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது?
கொரோனா தொற்று, முதலில் இருமல் மற்றும் காய்ச்சலை உருவாக்கி இறுதியாக சுவாசப் பாதையை அடைகிறது.
அதாவது, நுரையீரலுக்கும் வெளிப்புறத்திற்கும் இடையில் காற்று செல்லும் பாதையில் வைரஸ் அடைத்துவிடும்.
இதன் காரணமாக சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்படும். பிறகு நரம்புகளிலும் பிரச்னையை ஏற்படுத்தும். தொடர்ந்து, சிறு துகள்கள்கூட வாய்வழியாகத் தொண்டைக்குச் செல்லும்போது இருமல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
இது அதிகமாகும்போது வைரஸ் காற்றுப் பாதையில் இருந்து அதன் முடிவில் உள்ள வாயு பரிமாற்ற மையத்திற்குச் செல்கிறது.
இறுதியாக நுரையீரலின் அடிப்பகுதியில் உள்ள காற்றுப் பைகளுக்குச் சென்று அப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தி, அதன் மூலம், நிமோனியா அறிகுறிகள் அதிகம் தோன்றும்.
இதன் காரணமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலை ஏற்பட்டு, நுரையீரலுக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல், இதர உடலியக்க செயல்பாடுகள் தடைபடும்.
உடலின் ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை அகற்றும் வேலையை குறைக்கிறது. இறுதியில் ஒரு கட்டத்திற்கு செல்லும்போது தான் மரணம் ஏற்படுகிறது.