கொரோனாவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் நான்கு கனேடிய வங்கிகள் கிரெடிட் கார்டுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்துள்ளன.
டொராண்டோ-டொமினியன் வங்கி, ராயல் பாங்க் ஆப் கனடா (RY.TO), நேஷனல் பாங்க் ஆப் கனடா (NA.TO) மற்றும் கனேடிய இம்பீரியல் பாங்க் ஆப் காமர்ஸ் CIBC.TO ஆகியவை கிரெடிட் கார்டு வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்துள்ளன.
கஷ்டங்களை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு டிடி வங்கி கிரெடிட் கார்டு வட்டி விகிதங்களை 50% குறைக்கும், மேலும் ராயல் வங்கி குறைந்தபட்ச கட்டண ஒத்திவைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு அதே அளவிற்கு கட்டணங்களை குறைக்கும் என்று தெரிவித்துள்ளது.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச கொடுப்பனவுகளை 90 நாட்கள் வரை ஒத்திவைக்கவும், இந்த வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு வட்டி விகிதங்களை 10.9% ஆக குறைக்கவும் தேசிய வங்கி அனுமதி அளித்துள்ளது.
சி.ஐ.பி.சி யும் தனிநபர் கிரெடிட் கார்டுகளில் வட்டி விகிதங்களை 10.99 சதவீதமாகக் குறைக்கும் என கூறியுள்ளது.
பெரும்பாலான ராயல் வங்கி மற்றும் சிஐபிசி கிரெடிட் கார்டுகள் வாங்குதலுக்கு 19.99% வட்டி வசூலிக்கின்றன. பெரும்பாலான தேசிய வங்கி 20.99% வசூலிக்கின்றன.
கடந்த வாரம், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடியர்கள் மீது சுமத்தப்பட்ட கிரெடிட் கார்டு வட்டி விகிதங்களைத் குறைக்க உதவுமாறு தனது அரசாங்கம் வங்கிகளை வலியுறுத்தியதாகக் கூறினார்.
வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை எளிதாக்க வங்கிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.