இந்தியாவில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய சேரிகளில் ஒன்றில் முதல் கொரோனா வைரஸ் மரணம் ஏற்பட்டுதை அடுத்து முன்னணி இந்திய மருத்துவர்கள் மிகவும் பயங்கரமான தாக்குதலை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் வர்த்தக தலைநகர் மும்பையில் உள்ள தாராவியில் 56 வயது நபர் புதன்கிழமை உயிரிழந்தார்.
அவருக்கு எந்த பயண வரலாறும் இல்லை, உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு அவர் இறந்தார் என்று மும்பை நகர அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் பரிசோதிக்கப்பட்டு வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 300 வீடுகள் மற்றும் 90 கடைகள் நிரம்பிய அவர் வாழ்ந்த பகுதி தொற்றுநோய் பரவுவதை தடுக்க வகையில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை, தாராவியில் உள்ள நகரத்தின் பிரஹன் மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் 52 வயதான துப்புரவாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
சுமார் 1 மில்லியன் மக்கள் வசிக்கும் தாராவி நியூயார்க் நகரத்தை விட கிட்டத்தட்ட 30 மடங்கு அதிக மக்கள் தொகை கொண்டுள்ளது, சதுர கிலோமீட்டருக்கு சுமார் 2,80,000 மக்கள் வாழ்கின்றனர்.
அங்கு சிறந்த சுகாதாரம் இல்லை மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் அருகருகே வாழ்கின்றனர், சமூக இடைவெளி உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமற்றதாக ஆக்குகிறது.
இந்தியாவின் பல சேரிகளில் ஒன்றின் ஊடாக கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவினால் நிலைமையை நிர்வகிக்க முடியாது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.