நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவின் காரணமாக சினிமா பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று அவர்களது சார்பில் நிதி அளித்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவால் எவ்வித படப்பிடிப்புகளும் நடக்காமல் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டில் போரடிக்காமல் இருப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்பதை வீடியோக்களாக பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ்த் திரைத்துறையின் தொழிலாளர் சங்கமான பெப்சியில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். அதில் 18 ஆயிரம் பேருக்கு ரேஷன் கார்டு இல்லை. இதனால் அவர்களுக்கு இதுவரை ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் வரை பிரபலங்கள் நிதியாக அளித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா கட்சி ஊழியர்கள் சுமார் 20 லட்சம் ரூபாயை நீதியாக கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.