ஈக்வடார் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் தெருக்களில் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மேற்கு நகரமான குயாகுவிலிலே இத்துயரம் நிகழ்ந்துள்ளது.
ஈக்வடார் நாட்டில் தற்போது வரை கொரோனாவால் 172 பேர் பலியாகியுள்ளனர், 3,465 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரத்தால் குயாகுவில் நகரில் பொது சேவைகளை நெருக்கடி நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.
நோய்வாய்ப்பட்ட நோயாளிகளை ஏற்றுக்கொள்வதற்கு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, மற்றும் சடலங்கள், கல்லறைகள்ஆகியவை இடமில்லாமல் திணறுகின்றன.
சடலங்களை வைக்க எந்த இடமும் இல்லாததால், சில குடியிருப்பாளர்கள் தங்களுக்கு வேறு வழியில்லாமல் தெருக்களில் உள்ள நடைபாதையில் சடலங்களை வைப்பதாக கூறுகிறார்கள்.
குயாகுவில் நகரில் கொரோனா காரணமாக எத்தனை பேர் இறக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பல குடும்பங்கள் தங்கள் உறவினர்களுக்கு வைரஸின் அறிகுறிகள் இருப்பதாகக் கூறுகின்றன.
மார்ச் 23-30 க்கு இடையில், ஈக்வடார் அதிகாரிகள் 2.99 மில்லியன் குடியிருப்பாளர்கள் உள்ள குயாகுவில் நகரத்தின் வீடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட உடல்களை சேகரித்ததாக தேசிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
குயாகுவிலின் மேயர் சிந்தியா விட்டேரி கடந்த வாரம் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட வீடியோவில் மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளார்.
தற்காலிகமாக சடலங்களை வைக்க குயாகுவில் நகரத்திற்கு கண்டெயினர்கள் வந்துள்ளன. உடல்களை நல்ல முறையில் அடக்கம் செய்யும் இடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.