3ஆம் திகதி திருணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்கா ஜோடி ஒன்று அட்டை மனிதர்கள் மத்தியில் ஒன்றிணைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதேபோல் அமெரிக்காவில் ஏப்ரல்30ஆம் திகதி வரை இந்த உத்தரவு அமலில் உள்ளது.
முன்னதாக Amy Simonson, Dan Stuglik ஜோடி 3ஆம் திகதி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், அவர்கள் எவ்வாறு அதை நடத்துவது என்று குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், திருமண ஏற்பாட்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு 100க்கும் மேற்பட்ட அட்டை பேப்பர்களால் தயாரிக்கப்பட்ட கட்அவுட் மனிதர்களை வழங்கியுள்ளது. அவர்கள், அதை இருக்கைகளில் வைத்துவிட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அந்த கட்அவுட்களில், பெரிய மனிதர்கள் போலவும், சிறிய பிள்ளைகள் போலவும் பலவிதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது.
Stuglik இதுகுறித்து நாங்கள் எதார்த்தமான மனிதர்களை தேடி கொண்டிருந்தோம். எங்களுக்கு அந்த வடிவிலேயே கிடைத்துவிட்டது.
மேலும், எனது வருங்கால மனைவிக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதனால் இதுபோன்ற ஏற்பாடு செய்திருந்தேன். அதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு நிச்சயம் நான் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருமணத்தில் ஆலயத்தில் அவர்களை சுற்றி வைக்கப்பட்ட அட்டைகள் நடுவில் தம்பதி அமர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.