கொரோனா வைரஸ் குறித்து குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு கனடா பிரதமர் பதிலளித்த நிலையில், அதில் ஒரு சிறுமி தன்னுடைய தந்தை குறித்து எழுதியிருந்த கடிதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் கனடாவில் மட்டும் தற்போது வரை 19,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,447 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ இந்த வைரஸிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும், சில சலுகைகளையும் அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் இரண்டு தினங்களுக்கு முன், ஜஸ்ட்டின் கொரோனா வைரஸ் குறித்து உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கேளுங்கள் என்று ஒரு குறிப்பிட ஐடியை கொடுத்திருந்தார்.
Two days ago, I asked if your kids had any questions about COVID-19. Turns out they did – thousands of great ones were quickly sent in. @CPHO_Canada and I answered as many of them as we could, and you can catch it all on CBC or at https://t.co/U1jTZpJJcy in just 30 minutes!
— Justin Trudeau (@JustinTrudeau) April 5, 2020
அதில் சுமார் ஆயிரத்திற்கும் மேலான குழந்தைகள் தங்கள் கேள்விகளை கேட்டிருந்தனர். அப்போது மலாக் என்ற 8 வயது சிறுமி ஒருவர் என்னுடைய தந்தை வேலை விஷயமாக துபாய் சென்றிருந்தார். அவர் நேற்று வந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்போது குறிப்பிட்ட விமானநிலையங்கள் பூட்டப்பட்டுள்ளதால், அவரால் திரும்ப முடியவில்லை, நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கனடா மக்களையும் நிச்சயமாக எந்த ஒரு பிரச்சனையுமின்றி கொண்டு வந்து சேர்ப்பேன் என்று உறுதியளித்திருந்தீர்கள்.
என்னுடைய அப்பாவை நான் மிகவும் விரும்புகிறேன், ஆனால் அவர் இப்போது இல்லாதது வருத்தமாக இருக்கிறது. என்னுடைய தாய் மற்றும் தாத்தா, பாட்டியும் அப்பாவை நினைத்துக் கொண்டே இருக்கின்றனர். அவர் விரைவில் வருவதற்கு உதவுங்கள் என்று கேட்டிருந்தார்.
அதற்கு ஜஸ்ட்டின், என்னால் உங்களின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது, எந்தளவிற்கு பயத்தில் இருப்பீர்கள் என்று தெரிகிறது. அரசு வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கனேடியர்களையும் அழைத்து வர முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது.
ஏனெனில் பல நாடுகள், இந்த கொரோனா வைரஸ் காரணமாக சில புதிய விதிமுறைகள் எல்லாம் கொண்டு வந்துள்ளன. இதனால் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, கூடிய விரைவில் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன் என்று கூறியுள்ளார்.