தீவிர சிகிச்சை பிரிவில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த அமெரிக்காவும் அவருக்காக பிரார்த்தனை செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவரது நிலை தீவிர கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தாலும், செயற்கை சுவாசம் வழங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மொத்த அமெரிக்காவும் போரிஸ் ஜான்சன் குணம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தகவல் கேட்டு தாங்கள் மிகவும் வருந்தியுள்ளதாக கூறும் டிரம்ப், பிரதமர் ஜான்சனுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்களிடம் தொலைபேசியில் விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரும் மருந்து நிறுவனங்கள் உடனடியாக லண்டனை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.