விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகளால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நார்வே அரசு தெரிவித்துள்ளது.
நார்வே நாட்டில் பிப்ரவரி 26 ஆம் திகதி முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட நார்வே அரசு கொரோனா வைரஸ் தொற்றை உடனடியாக கண்டறியும் வகையில் நாடு முழுவதும் 20 பரிசோதனை மையங்களை உருவாக்கியது.
அத்துடன் மார்ச் 12 ஆம் திகதியில் இருந்து ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தும் பணியில் இறங்கியது.
அமெரிக்காவில் தற்போது 10 லட்சம் பேர்களில் 18 ஆயிரத்து 996 பேருக்கு பரிசோதனை என்ற அளவிலேயே செயற்பாடு இருக்கும் நிலையில் நார்வேயில் ஒரு லட்சத்துக்கு ஆயிரத்து 986 என்ற விகிதத்தில் பரிசோதனை இருந்தது.
அமெரிக்காவை விட ஐந்து மடங்கு வேகமாக நோயாளிகளை கண்டறிந்து உடனடியாக அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை ஆரம்பித்தன.
இதனால் நோய் அறிகுறி தென்பட்ட நிலையிலேயே அவர்களை கண்டறிந்து சமூக பரவலை எளிதாக கட்டுப்படுத்தின.
இதனால் கொரோனா வைரஸ் பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்தியது. இதன் காரணமாக ஏப்ரல் 2 ஆம் திகதியில் இருந்து புது நோயாளிகளின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துள்ளது.
தற்போதைய நிலையில் புதிதாக 2.5 சதவீதம் பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை 0.7 ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகள் உள்ளிட்ட காரணங்களால் கொரோனாவை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் எனவும் நார்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.