கொரோனா வைரசால் பங்கு சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் இந்தியா உட்பட உலக நாடுகளில் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட சரிவை சந்தித்துள்ளன, இந்நிலையில் ஹருன் என்ற நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி குறைந்துள்ளது.
இதனால் உலகளவில் 8 இடங்கள் கீழிறங்கி 17 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதேபோன்று எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடாரின் சொத்து மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடியும் (26 சதவீதம்), உதய் கோடக்கின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரத்து 400 கோடியும்( 28 சதவீதம்) குறைந்துள்ளது.
அதானி, சிவநாடார், உதய் கோடக் உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டமை குறிப்பிடத்தக்கது.