அயர்லாந்து பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணிக்கு திருப்பியுள்ளார்.
ஐரோப்ப நாடுகளின் ஒன்றான, அயர்லாந்தின் பிரதமர் லியோ வரட்கர் முன்னாள் மருத்துவர் ஆவார். அயர்லாந்தின் மருத்துவ பதிவேட்டில் தன்னை இணைக்கும் படி சுகாதாரதுறைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர், தாவோசீச் உறுதிபடுத்தியுள்ளார்.
வரட்கர் கட்சியில் இணையும் முன் பல ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணியாற்றியுள்ளார். அரசியலில் இணைந்த 2013ஆம் ஆண்டு மருத்துவ பதிவேட்டில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டது.
அவர் என்ன மாதிரியான சிகிச்சை வழங்குவார் என்பது குறித்து துறைசார் செய்திகள் அறிவிக்கவில்லை. ஆனால், கொரோனா குறித்து அலைப்பேசிகளில் பலரும் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை தீர்த்து கொள்ளும் துறையில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
வரட்கரின் தாய், தந்தை, சகோதரிகள் ஆகியோர் மருத்துவதுறையில் பணியாற்றியுள்ளனர்.
அயர்லாந்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,443ஆக உள்ளது. அவர்களில் 1,203பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.