உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது.
உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1919 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர்.
அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள்ளமை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க மாநிலங்களில் நியூயோர்க்கில் வைரஸ் தொற்று கடுமையாகியுள்ள நிலையில் அங்குமட்டும் கடந்த 24 மணிநேரங்களில் 731 பேர் மரணமடைந்துள்ளனர்.
அங்குமட்டும் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 863 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 489ஆகக் காணப்படுகிறது.
இதையடுத்து நியூஜெர்ஸி மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரேநாளில் 229 பேர் மரணித்து மொத்த மரணம் ஆயிரத்து 232ஆகப் பதிவாகியுள்ளது.
அங்கு 44 ஆயிரத்து 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிச்சிகக்ன் மாகாணத்தில் ஒரு நாளில் 118 பேர் மரணித்து மொத்த உயிரிழப்பு 85 ஆகவும் மொத்த பாதிப்பு 18ஆயிரத்து 970ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஐரோப்பிய நாடான பிரான்சில் 1417 பேர் ஒரே நாளில் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு பத்தாயிரத்தைக் கடந்து 10 ஆயிரத்து 328ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் உலக அளவில் 14 இலட்சத்து 23 ஆயிரத்து 642 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணங்கள் 80 ஆயிரத்தைக் கடந்து தற்போது 81 ஆயிரத்து 857ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு இதுவரை 3 இலட்சத்து ஆயிரத்து 623பேர் குணமடைந்துள்ள போதும், தற்போது மரணமடைவோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.