கடந்த 24 மணிநேரத்தில் 554 பேர் மருத்துமனைகளிலும், 433 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இதுவரை மொத்தமாக 13,197 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். ( மருத்துமனைகளில் 8,598, மூதாளர் இல்லங்களில் 4,599)
கடந்த 24 மணிநேரத்தில் 4,343 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 3,161 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகுதி 1,182 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது 7004 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, 34 வீதமானவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 98 பேர் 30வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 90,676 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தற்போது 32,267 பேர் மருத்துமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.