பிரித்தானியாவில் மனைவி, கணவர் உடல்நிலை குறித்து கவலைப்பட்ட போது மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அடுத்த நாளே கொரோனா பாதிப்பால் கணவரும் உயிரிழந்துள்ளார்.
Durham கவுண்டியை சேர்ந்தவர் டேவிட் மோரிசன். இவர் மனைவி அன்.
அன் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் அதற்கு அடுத்தநாளே கடுமையான கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் இருந்த டேவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தம்பதியின் மகன் பவுல் கூறுகையில், என் தாயும் தந்தையும் விரைவில் 50வது திருமண ஆண்டை கொண்டாட இருந்தார்கள்.
இந்த சூழலில் டேவிட்டுக்கு கடுமையான கொரோனா அறிகுறி ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.
இதையடுத்து கணவரின் உடல்நிலையை பற்றியே அன் கவலைப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார்.
இதற்கு அடுத்தநாள் மருத்துவமனையில் என் தந்தை உயிரிழந்தார்.
இது மிகவும் கொடுமையானது, என் தாய் உயிரிழந்துவிட்ட தகவலை நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து சொன்னேன், அதற்கு அடுத்தநாளே என் தந்தை இறப்பு குறித்தும் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன்.
என் பெற்றோரின் மறைவு மிகுந்த வேதனை தருகிறது என கூறியுள்ளார்.