பிரித்தானியாவின் வேல்ஸில் அவசர மருத்துவ சேவை ஊழியரை கடித்து அவர் மீது எச்சில் துப்பிய இளம்பெண்ணுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸில் Joel Martinique (24) என்ற இளம்பெண் மருத்துவ சேவை ஊழியர் அருகில் சென்றுள்ளார்.
பின்னர் அவர் உடலில் கடித்துவிட்டு எச்சில் துப்பினார், இதோடு தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கத்தியுள்ளார்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் Joel Martinique-ஐ கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.
Joel மீது 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், அவசர சேவை ஊழியர்களைத் தாக்குவது என்பது ஏற்கத்தக்கது அல்ல, அவரிடம் அப்பெண் நடந்து கொண்ட விதம் மிக மோசமானது என கூறியுள்ளனர்.