கனடாவின் லண்டன் நகரில் கொரோனாவால் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தின் லண்டன் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 50களில் உள்ள பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான தகவலை Middlesex-London Health Unit வெளியிட்டுள்ளது.
லண்டன் நகரில் 9 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தமாக ஒன்றாறியோ மாகாணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 274ஆக உள்ளது என CBC tallies தெரிவித்துள்ளது.
கனடாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,318ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.