கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படும் நோயாளிகளுக்கு வென்ட்டிலேட்டர் வசதி கட்டாயம் என்ற நிலையில், அமெரிக்காவில் வென்ட்டிலேட்டர்களால் அதிக கொரோனா இறப்பு நேர்ந்துள்ளதாக மருத்துவர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது கொரோனா பரவல் அதிகமான நியூயார்க்கில் சில மருத்துவர்கள் வென்ட்டிலேட்டர்களைக் கண்டு அச்சப்படத் தொடங்கியுள்ளனர்.
மட்டுமின்றி சில மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர்களினால் ஏற்படும் கொரோனா இறப்பு எண்ணிக்கை வழக்கத்துக்கு அதிகமாக இருப்பதால் இந்த மெஷின்கள் சில நோயாளிகளுக்கு ஆபத்தாக இருப்பதாக கவலையடைந்துள்ளனர்.
பொதுவாக தீவிர சுவாச நோய் உள்ள நோயாளிகள் வென்ட்டிலேட்டர்களில் வைத்தாலும் கூட 40-50 பேர் மரணமடைந்து விடுவார்கள்,
ஆனால் நியூயார்க்கில் வெண்ட்டிலேட்டர்களில் வைக்கப்பட்ட 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் மரணமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டுமின்றி வென்ட்டிலேட்டர் மரணங்கள் பிரித்தானியா, சீனாவிலும் ஏற்பட்டுள்ளதாக சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சீனா வுஹன் நகரில் வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டவர்களில் 86 சதவீத மக்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கொரோனா தொற்றுக்கு முன்பாக நோயாளிகள் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதைப் பொறுத்தது இந்த மரணங்கள் நேர்ந்திருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள் சிலர்.
ஆனால், ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை வென்ட்டிலேட்டர்கள் இன்னும் மோசமடையச் செய்ய வாய்ப்பிருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.