இத்தாலி, பிரான்ஸ் நாடுகளல்ல, ஐரோப்பாவில் கொரோனாவுக்கு மிகவும் மோசமாக பாதிக்கப்படப் போகும் நாடு பிரித்தானியா என முன்னணி நிபுணர் ஒருவர் கணித்துள்ளார்.
தற்போது கொரோனா தொடர்பான தடுப்பு மருத்து குறித்து பிரித்தானிய அரசுக்கு ஆலோசனைகள் வழங்கி வரும் Sir Jeremy Farrar, தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியா ஜேர்மனியின் செயல்பாடுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர்,
ஆனால் பிரித்தானிய அரசு மிகவும் மெத்தனமாக கொரோனா விவகாரத்தில் செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் நாளுக்கு கொரோனா மரண எண்னிக்கை எகிறி வரும் நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
வெள்ளியன்று 980 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில், மார்ச் 28 ஆம் திகதி ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 971 பேர் பலியானதாக பதிவு செய்யப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 3 ஆம் திகதி 950 பேர் ஒரே நாளில் பலியானார்கள். அதே நிலையில் தற்போது பிரித்தானியா வர காரணம் என்ன என்பதையும் அவர் கேள்வி கேட்டுள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்புக்கு கருப்பு மற்றும் சிறுபான்மை இன மக்கள் அதிக அளவில் இலக்காகின்றனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன, ஆனால் ஏன் என்று தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனாவுக்கான ஒரு தடுப்பூசி தயாராக இருக்கலாம் என்று கூறிய அவர், ஆனால் கண்டிப்பாக மொத்த பொதுமக்களுக்குமானதாக இருக்கது என்றார்.



















