பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனாவால் மருத்துவமனையில் இருந்த போது இரண்டு குறிப்பிட்ட செவிலியர்களை பாராட்டிய நிலையில், அதில் ஒரு செவிலியரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அவர், வீடியோ ஒன்றில் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய சுகாதார சேவை ஊழியர்கள், அதாவது NHS ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
It is hard to find the words to express my debt to the NHS for saving my life.
The efforts of millions of people across this country to stay home are worth it. Together we will overcome this challenge, as we have overcome so many challenges in the past. #StayHomeSaveLives pic.twitter.com/HK7Ch8BMB5
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) April 12, 2020
அதில் செவிலியர்கள் பலரின் பெயரைக் குறிப்பிட்ட போரிஸ், குறிப்பாக இரண்டு பேரின் பெயரைக் குறிப்பிட்டார்.
அதில் ஒருவரின் பெயர் நியூசிலாந்தைச் சேர்ந்த Jenny McGee மற்றும் போர்ச்சுகலைச் சேர்ந்த Luis Pitarma என்று கூறினார்.
இவர்கள் 48 மணி நேரம் தனது படுக்கைக்கு அருகில் நின்று கவனித்து கொண்டதாகவும், அதன் முடிவில் என் உடல் போதுமான ஆக்ஸிஜனைப் பெற முடிந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அதில் ஒரு செவிலியரான போர்ச்சுக்கலை சேர்ந்தL uis Pitarma-வின் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகம் முதல் முறையாக வெளியிட்டுள்ளது.
இவரை போரிஸ் ஜோன்சனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர் என்று சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.