கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ வரும் வாரங்கள் முக்கியமானவை, நாம் எங்கிருக்கிறோம் என்பதை பற்றி சிந்திக்க ஒரு அருமையான வாய்ப்பு என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கனடாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஈஸ்டர், தமிழ் புத்தாண்டு போன்ற தினங்களில் தங்கள் உறவினர்கள் மற்றும் மக்களுடன் ஒன்று கூடி கொண்டாட முடியாத நிலை குறித்து அந்நாட்டின் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ பேசியுள்ளார்.
அதில், அனைவருக்கும் வணக்கம். இந்த வாரத்தின் இறுதி நாட்கள் பல கனேடியர்களுக்கு முக்கியமான நாட்களாக இருக்கும். ஆனால் அதை ஒன்றாக சேர்ந்து கொண்டாட முடியாத சூழ்நிலை, உள்ளது.
ஈஸ்டர், பாஸவர், தமிழ் புத்தாண்டு அல்லது வால்சாகி போன்ற தினங்கள் இந்த வாரத்தின் இறுதி நாட்களில் வருகிறது.
இது சிந்திப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு, நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பு. இது மிகவும் கடினம் என்பது தெரியும். இருப்பினும் வேறு வழியில்லை.
கடந்த 1917-ஆம் ஆண்டு ஈஸ்டர் திங்கள் அன்று Vimy Ridge (9 ஏப்ரல் 1917 முதல் 12 ஏப்ரல் 1917) போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் போராடினர்.
அன்றைய தினத்தில் பலர் தியாக வீரர்களாக மாறினர், அவர்களின் தியாகம் மூலம் நாம் இப்போது இங்கிருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்திய ஜஸ்ட்டின், அது போன்று தற்போது நாட்டில் ஹீரோக்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இன்னும் பலர் இந்த தொற்று நோயிற்கு எதிராக போராடி வருகின்றனர்.
This weekend is a chance for all of us to reflect on what matters, and to think about where we are. I know this hasn’t been easy, but I also know that we’ll get through this together. And this long weekend, that’s my message to you. Watch my daily update below. pic.twitter.com/41vlutRJzi
— Justin Trudeau (@JustinTrudeau) April 12, 2020
அதே போன்ற சூழ்நிலை இப்போது இருக்கிறது. இது நம்முடைய வேலை. நாடு பழைய நிலைக்கு திரும்புவதற்கு உதவுவோம், இந்த சூழ்நிலை மிகவும் கடினமானது, நாம் இந்த நோயின் பரவலை தடுக்க வேண்டும், அதற்கான ஆபத்தில் இருக்கிறோம்.
வரும் வாரங்கள் மற்றும் மாதங்கள் கடுமையாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, ஆனால் கனேடியர்களாகிய நம்மால் இதை செய்ய முடியும், இந்த வைரஸால் ஏற்கனவே ஏராளமானோர் பாதிக்கப்பட்டுவிட்டனர், அதில் ஒரு சிலர் தங்கள் உறவுகளை பிரிந்து சொல்ல முடியாத வேதனையில் இருக்கின்றனர்.
ஒரு வேளை நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக உணர்ந்தீர்கள் என்றால் அப்படி நினைக்காதீர்கள், நீங்கள் தனிமையில் இல்லை, நாங்கள் இருக்கிறோம். வரும் நாட்கள் இன்று மற்றும் நாளை நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதை வைத்தே, நாம் எந்தளவிற்கு கொரோனாவை சீக்கிரத்தில் விரட்ட முடியும் என்பதை அறியலாம்.
இது இந்த தலைமுறையினருக்கு இது ஒரு சவால் என்றே கூறலாம். வீட்டிற்குள் இருப்போம், நாட்டை காப்போம் என்று கூறியுள்ளார்.