கனடாவில் கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட நபரை பொலிசார் விரட்டி விரட்டி கார் ஏற்றி பிடித்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் டொராண்டோ பாதுர்ஸ்ட் மற்றும் கிங் ஸ்ட்ரீட் பகுதிக்கு அருகே நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் வீட்டிற்குள் இருந்த பலர் குறித்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீடியோவில், சந்தேக நபர் பெரிய கத்தியுடன் ஒருவரை நடுரோட்டில் அடித்து தள்ளிவிட்டு அவரிடம் இருக்கும் பைகளை பறித்து செல்ல முயல்கிறார்.
அப்போது காரில் வந்திறங்கிய பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு சந்தேக நபரை விரட்டிச் செல்கின்றனர்.
அவன் கையில் கத்தியிருந்த போதும் தொடர்ந்து விரட்டிய பொலிசார் இறுதியில் சந்தேக நபரை காரால் மோதுகின்றனர்.
https://twitter.com/blogTO/status/1249675783259512832
அதில் அவன் காயமடைந்து தரையில் சுருண்டு விழ சுற்றி வளைத்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.
@globalnewsto @CP24 @CityNews @CTVToronto @CBCToronto @nowtoronto @SIUOntario @TorontoPolice I am the original poster and I am re-posting earlier video. Officer driving car seems to flee the scene, can anyone explain this?? April 12, 2020 #Toronto #torontopolice #kingandbathurst pic.twitter.com/wuDVTkiL1J
— Nicole (@NicoleIvanna4) April 13, 2020