இலங்கையில் உள்ள சீனத் தூதகரத்தின் டுவிட்டர் கணக்கு மீண்டும் இயல்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சீனத் தூதகரம் தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட சில மணித்தியாலங்களில் அது இயல்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு எவ்வித முக்கிய காரணமும் கூறப்படாமல் முடக்கப்பட்டதாக தூதரகம் குறிப்பிட்டிருந்தது.
டுவிட்டர் சட்டங்களை மீறிய காரணத்துக்காகவே கணக்கு முடக்கப்பட்டதாக டுவிட்டர் தளம் தெரிவித்திருந்தது. எனினும் சட்டமீறல் எது என்பதை அது குறிப்பிடவில்லை.
கொரோனவைரஸ் பரவலை அடுத்து சீன தூதரகம் டுவிட்டர் பயன்பாட்டாளர்களுடன் கருத்து மோதல்களில் ஈடுபட்ட வந்த நிலையிலேயே இந்த கணக்கு மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.