கொரோனா வைரஸால் அமெரிக்கா உச்ச உயிரிழப்பை சந்தித்து கடந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவி்த்துள்ளார்
கொரோனா தொற்றால் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,569 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவில் குறைந்தபட்சம் 1,900 பேர் நாள்தோறும் உயிரிழந்து வருகின்றனர்
அமெரிக்காவில் நேற்று மட்டும் புதிதாக 30 ஆயிரத்து 206 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது,
இதனால் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.44 லட்சமாக அதிகரித்துள்ளது. 48 ஆயிரத்து 700 பேர் இதுவரை கரோனாவாலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேட்டி அளித்தார் அவர் கூறுகையில் கொரோனா வைரஸால் அமெரிக்கா உச்சபட்ச உயிரிழப்பையும், பாதிப்பையும் பார்த்து கடந்துவி்ட்டது. பல மாநிலங்களில் பொருளாதார இயல்புநிலைக்காக இம்மாத இறுதியில் தடைகள் தளர்த்தப்பட்டு திறக்கப்படும்.
அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அமெரிக்க அரசு அறிவிக்கும்.
அமெரிக்கா மீண்டு வரும், நம்புவோம், நம்நாட்டை மீண்டும் எழுச்சிக்கு கொண்டுவர வேண்டும். நமக்கு தொடர்ந்து வளர்ச்சி இருக்கிறது என நம்புவோம்.
மே 1-ம் திகதி தான் இயல்புநிலைக்கு மாநிலங்கள் வரும் எனத் தெரிவித்திருந்தேன். ஆனால், பல மாநிலங்கள் இம்மாத இறுதிக்குள் ஊரடங்கு தடைகளைத் தளர்த்த தயாராகிவிட்டன. தடைகளைத் தளர்த்தினாலும் உயிரிழப்பு ஏற்படும் என்றால், ஊரடங்கு இருந்தாலும் காலப்போக்கில் உயிரிழப்பு ஏற்படும்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மிகவும் முக்கியம், மக்களுக்கு நம்பிக்கையூட்ட அந்த தடூப்பூசி கண்டுபிடிப்பது கட்டாயம் அதற்கான பணிகளில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது என கூறியுள்ளார்.